மியான்மர் இராணுவத்தால் 7 வயது சிறுமி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மியான்மர் நகரில் கடந்த சில மாதங்களாகவே ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்தப் போராட்டத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்று உள்ளனர். மேலும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்சிலர் ராணுவத்தினரால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமின்றி படுகாயமடைந்தோர் ஏராளம். அதையெல்லாம் பொருட்படுத்தி கொள்ளாமல் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதனால் 628 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டு அவர்களை விடுவித்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையை பின்பற்றி வருகிறது. அதனால் போராட்டக்காரர்களை பகலில் விரட்டியடிப்பது இரவு நேரத்தில் அவர்கள் வீட்டுக்குள் புகுந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதேபோல் நேற்று முன்தினம் இரவு மண்டலே நகரில் உள்ள வீடுகளுக்குள் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து போராட்டக்காரர்களை கைது செய்தனர். மேலும் மவுங் கோ ஹாஸின் பாவின் என்பவர் வீட்டுக்குள் அவரை கைது செய்ய ராணுவ வீரர்கள் நுழைந்து உள்ளனர்.
அதனால் அவருடைய கின் மோ சிட் என்ற மகள்(7) ராணுவ வீரரை கண்டு பயந்து தன் தந்தையின் அருகே சென்றுள்ளார் . அப்போது ராணுவ வீரர் தன்னிடம் இருந்த துப்பாக்கி எடுத்து அந்த சிறுமியை சுட்டுள்ளார். அதனால் சிறுமியின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாகஉயிரிழந்தார். இதனையடுத்து 7 வயது சிறுமி ராணுவத்தால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.