நாகையில் உதவி மின் பொறியாளர் அலுவலகம் சேதமடைந்ததால் தற்போது புதிய அலுவலக கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகப்பட்டினத்தில் உதவி மின் பொறியாளர் பிரிவு அலுவலகம், வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் இயங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த அலுவலக கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை நாகல்நகர் கே.சி.பி. நகர் எதிர்புறம் உள்ள புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட கட்டிடம் திங்கட்கிழமை அன்று செயல்பட்டது.
காடம்பாடி, சவேரியார் கோவில் தெரு, இலுப்பைத் தோப்பு, வெளிப்பாளையம், நம்பியார் நகர், மணிக்கூண்டு ஹவுசிங் யூனிட், போலீஸ் குடியிருப்பு, வ.உ.சி. நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் மக்கள் மின் கட்டணம் நேரில் செலுத்த விரும்பினால் இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலகத்திற்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மின் கட்டணத்தை நேரில் செலுத்த முடியாதவர்கள் ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாகை உதவி செயற்பொறியாளர் சித்தி நாயகம் செய்தி குறிப்பில் கூறியிருந்தார்.