Categories
மாநில செய்திகள்

கடைகளில் தொற்று தடுப்பு நடவடிக்கை… மீண்டும் கொரோனா ‘அலர்ட்’..!!

கடைகளில் தொற்று ஏற்படாமல் தடுக்க மீண்டும் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு செய்து வருகிறது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு, கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் என, அனைத்து இடங்களிலும், கொரோனா தொற்று தவிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதாவது, கடைகளில் கிருமிநாசினி வைக்கப்பட்டது. கடைக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள், கிருமிநாசினி தெளித்து கைகளைச் சுத்தம் செய்த பிறகே, கடைகளுக்குள் நுழைய வேண்டும்; பொருட்களை வாங்க வேண்டும். கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் என, அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருப்பர்.

நாளடைவில், தொற்று பயம் நீங்கிய நிலையில், தொற்று தடுப்பு நடவடிக்கையிலும், தொய்வு தென்பட்டது. இந்நிலையில், மீண்டும் கொரோனா தொற்று அச்சுறுத்தத் துவங்கியுள்ள நிலையில், ‘‘பழைய படி, கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல் உள்ளிட்ட பொதுமக்கள் சென்று வரும் இடங்களில் கிருமிநாசினி வைக்க வேண்டும்’’ என, உள்ளாட்சி நிர்வாகங்கள், உத்தரவிட்டு வருகின்றன. ‘‘தவறும்பட்சத்தில், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’’ எனவும், தெரிவித்துள்ளன. அதே போன்று, முக கவசம் அணியாதோருக்கு, 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. கொரோனவில் அடுத்த அலையில் சிக்காமல், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

Categories

Tech |