Categories
மாநில செய்திகள்

பூங்கா பராமரிப்பாளர் லாட்டரியில் அடித்த அதிஷ்டம்…. தன் வசமிருந்த சீட்டை பரிசாக கொடுத்த பெண்….!!!

கேரளாவில் கோடைகால பம்பர் பரிசாக ரூ .6 கோடி ரூபாய் பரிசுத்தொகையை தட்டிச் சென்ற சந்திரன் என்ற பூங்கா பராமரிப்பாளர்.

கேரளா எர்ணாகுளம் அருகே பட்டிமட்டம்  என்ற கிராமத்தில் பாக்கியலட்சுமி என்ற  லாட்டரி ஏஜென்சி ஒன்று நடந்து வருகிறது. ஸ்மிதா மோகன் என்பவர் டிக்கெட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். அதில் அவருக்கு பூங்கா பராமரிக்கும்  பணியாற்றிவரும் சந்திரன் என்ற வாடிக்கையாளர் உள்ளார். அவர் தனக்கு கோடைகால பம்பர் பரிசு லாட்டரி டிக்கட்டை கடனாக வாங்குமாறு ஸ்மிதா மோகனிடம்  போன் மூலம் கூறியுள்ளார்.

அந்தத்  லாட்டரி டிக்கெடிருக்கு தற்போது கோடைகால முதல் பரிசாக ரூ. 6 கோடி ரூபாய் பரிசு தொகையாக விழுந்துள்ளது. இதை அறிந்த ஸ்மிதா உடனே சந்திரனை அழைத்து இது பற்றிக் கூறி அந்த லாட்டரி டிக்கெட்டை அவரிடம் ஒப்படைத்தார். சந்திரன் அதற்கு ஸ்மிதாவிடம்  ரூ .200 பணத்தையும் கொடுத்துவிட்டு கண்கலங்கி நன்றியை தெரிவித்துச்சென்றார். அதன்பிறகு சந்திரன் குட்டமசேரி பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் தனது லாட்டரி டிக்கெட்டை கொடுத்து அதற்கான ஆவணங்களையும் அழித்து 6 கோடி ரூபாய் பணத்தை டெபாசிட் செய்துள்ளார்.

இது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது இருப்பினும் சந்திரனைப் பெரிதுபடுத்தாமல் ஸ்மிதாவை மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர் அதற்கு காரணம் ஸ்மிதாவின்  மூத்தமகன் (13 ) மூளைக்கட்டி நோயால் பாதிப்படைந்துள்ளான் மற்றும் இளையமகனோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் இந்நிலையில் கிடைக்கும் வேலைகளை செய்து சிகிச்சைக்கு பணம் சேமித்து வருகிறார் .

அப்படி இருக்கும் நிலையிலும் துளியும் சந்திரனின் பணத்தின் மீது ஆர்வம் காட்டாமலும் ஆசை கொள்ளாமலும் தனது வசமிருந்த லாட்டரி டிக்கெட்டை அவரிடம் கொடுத் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.லாட்டரி பணம் குறித்து சந்திரன் தனது மூத்த மகள் வீடுகட்டி வருவதற்கு உதவுவதாகவும் இரண்டாவது மகள் அனிதாவின் படிப்பு செலவிற்கு பயன்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |