பங்களாதேஷ் பிரதமரை கொலை செய்ய முயன்ற 14 பேருக்கு 20 வருடங்களுக்கு பிறகு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அங்குள்ள ஒரு கல்லூரியில் நடத்தப்பட்ட பேரணியில் உரையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது அவர் உரையாடயிருந்த மேடைக்கு கீழ் இரண்டு வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் முன்பே தெரிய வந்ததால் வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு முன்பாகவே செயலிழக்க வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த 14 பேரும் Harkut Ul Jihad Al Islami என்ற பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த கொலை முயற்சியானது 2000 ஆம் ஆண்டு நடந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை 20 வருடங்களுக்கு பிறகு தாக்கா என்ற பகுதியில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றம் வழங்கியது.
அப்போது நீதிபதி Abu Zafar Mohammed Kamruzzaman,” தற்போது வழங்கப்படும் தண்டனை ஒரு முன்மாதிரியாக அமைய வேண்டும். இந்த தேசத் துரோகிககளை துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லலாம் அல்லது வரிசையில் நிற்க வைத்து தூக்கிலிடலாம்” என்று கூறியுள்ளார். இந்த 14 குற்றவாளிகளில் 5 பேர் சிறையில் இருந்து ஏற்கனவே தப்பிவிட்டனர். எனவே இந்த 5 பேருக்கான தண்டனை அவர்கள் கைது செய்யப்பட பின்பு நிறைவேற்றப்படும் என்று நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.