தைவான் நாட்டில் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தைவான் நாட்டில் கடற்கரை நகரமான பிங்டங் நகரில் விமானப்படைக்கு சொந்தமான4 எப்5இ ரக போர் விமானங்கள் உள்ளது.அந்த விமானங்கள் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அந்த விமானங்கள் வழக்கம்போல் பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றன . அப்போது விமானங்கள் சென்ற சிறிது நேரத்திலே இரண்டு விமானங்கள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது . அதனால் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் மூலம் மாயமான 2 விமானங்களை தேடும் பணிகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வந்தன.
இந்நிலையில் இந்த இரண்டு விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்துக்குள்ளாகி கடலுக்குள் விழுந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். அந்த 2 விமானங்களை இயக்கி வந்த விமானி ஒருவர் கடலுக்குள் சுயநினைவு இழந்த நிலையில் மிதந்துள்ளார். மேலும் அவரை உடனே மீட்டு ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் . அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறினர் . இதையேடுத்து விமானத்தை இயக்கி வந்த மற்றொரு விமானி மாயமாகியுள்ளார். அப்போது அங்குள்ள நெடுஞ்சாலையில் விமானத்தின் இருக்கை மற்றும் பாராசூடட் கிடைத்துள்ளதாக தகவல்கள் அறிந்து உடனே அங்கு சென்று பார்த்தனர். ஆனால் அந்த விமானி அங்கு இல்லை. மேலும் மாயமான அந்த விமானியை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.