வெயில் காலத்தில் உடல் சூட்டை தணிக்க சில டிப்ஸ் நீங்கள் செய்து பாருங்கள்.
சூட்டினால் வரும் வயிற்று வலிக்கு, கசகசாவை மிக்ஸியில் அரைத்து அதை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து தேவையான சர்க்கரை கலந்து பருகலாம். உடலை குளிர்ச்சியாக்கும். குழந்தைகளுக்கு பலம் தரும்.
முள்ளங்கியில் நீர்சத்து அதிகம். உடல் சூடு, உடல் வறட்சி ஆகியவற்றை முள்ளங்கி குறைக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் பக்கவாதத்தை தடுக்கும்.