கன்னடா தேவாலயத்தில் தன்னார்வலராக இருந்தவர் பாலியல் ரீதியாக குற்றம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் ரொரன்ரோவில் உள்ள மிசன் கிரொஸ்டியனா வோஸ் டி தேவாலயத்தில் 62 வயதான ஜோஸ் போர்டிலோ தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார். அவர் தேவலாயத்திற்கு வரும் 18 வயதுக்கு குறைவான இரண்டு சிறுவர்களிடம் பாலியல் ரீதியான குற்றம் செய்து உள்ளார். இவர் கடந்த 2013 ஜூலையில் இருந்து 2020 ஆகஸ்ட் வரை இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் இவரை கைது செய்து 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ஜோசால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் வந்து புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.