Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியரிடம்…” தவறாக நடக்க முயன்ற வடமாநிலத்தவர்”… அதிரடியாக கைது செய்த போலீஸ்..!!

ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் இடம் தவறாக நடக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் செவிலியர் ஒருவரிடம் அங்கு இருந்த நபர் ஒருவர் தவறான எண்ணத்துடன் நெருங்கி தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பெண் செவிலியர் சத்தம் போடவே அங்கிருந்த நபர் துரத்த முற்பட்டனர். அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர், தனிப்படை அமைத்து அந்த நபரை தேடி வந்தனர். இதையடுத்து அங்கு உள்ள சிசிடிவி காட்சிகள் சோதனை செய்து மூன்றரை மணி நேரத்தில் அந்த நபர் கைது செய்தனர். அந்த நபரை குறித்து விசாரணை செய்தபோது அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |