Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கட்டுப்பாடு….? – வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவது ஒரு பக்கம் இருந்தாலும் கொரோனா ஒரு பக்கம் மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே நாளில் மட்டும் 532 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. செங்கல்பட்டு- 149 ,கோவை- 146 ,திருவள்ளுர் -71 ,தஞ்சை- 67, காஞ்சி- 51 ,மதுரை -40, சேலம்-33, திருப்பூர்- 32, குமரி- 27, வேலூர் -23, திருவாரூர் -21 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |