ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிப்பதாக பிரபல பாடலாசிரியர் மதன் கார்த்திக் கூறியுள்ளார்.
2019 ஆம் ஆண்டிற்கான 67 வது திரைப்பட தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரையுலகிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தலைவி படத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாடலாசிரியர் மதன் கார்த்திக் தேசிய விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும் அசுரன் படத்திற்கு பின்னணி இசை அமைத்த ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி வருத்தம் அடைவதாகும் அவர் தெரிவித்தார். ஆனால் இனிவரும் காலங்களில் ஜிவி பிரகாஷுக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார்.