நடிகை சிம்ரன் நடிகர் பிரசாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் அந்தகன். இந்தப் படத்தில் ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹிந்தியில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ராதிகா ஆப்தே, அயுஷ்மன் கிர்ரானா ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன்.
Memories from #KannedhireyThindrinal 😍😍 Time just flies 🤩 @actorprashanth pic.twitter.com/llsZIcNRdC
— Simran (@SimranbaggaOffc) March 22, 2021
இந்நிலையில் நடிகை சிம்ரன் நடிகர் பிரசாந்துடன் ‘கண்ணெதிரே தோன்றினாள்’ படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தற்போது ‘அந்தகன்’ படத்தில் பிரசாந்துடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . மேலும் அதில் அவர் ‘காலம் ஓடி விடுகிறது’ என பதிவிட்டுள்ளார்.