Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அருமையான இந்த ஊறுகாயை செய்து… சாதத்துடன் சாப்பிட்டு பாருங்க… நாக்கில் அவ்வளவு சுவையூறும்..!!

மாங்காய் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:

பெரிய மாங்காய்       – 1
நல்லெண்ணெய்       – கால் கப்
கடுகு                                – 1 ஸ்பூன்
வெந்தயம்                     – கால் டீஸ்பூன்
மிளகாய் பொடி           – 1 ஸ்பூன்
காயம்                              – 2 துண்டு
உப்பு                                  – தேவையான அளவு

செய்முறை:

முதல்ல மாங்காயை நல்லா கழுவினதும், சின்ன துண்டுகளாக வெட்டி எடுத்துகணும். பிறகு கடாயை அடுப்புல வச்சி, சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடேறியதும்,வெந்தயத்தையும், காய துண்டுகளையும் தனித்தனியாக போட்டு வாசனை வரும் வரை வறுத்ததும், எடுத்து மிக்சிஜரில்ல போட்டு பவுடராக அரைச்சி எடுத்துக்கணும்.

பின்னர் அதே கடாயை அடுப்புல வச்சி, கடுகு போட்டு தாளிச்சதும், நறுக்கி வச்ச மாங்காயை சேர்த்து, ருசிக்கேற்ப உப்பு, மிளகாய் பொடி போட்டதும், மாங்காயின் பச்சை வாடை போகும் வரை நல்லா வதக்கிக்கனும்.

மேலும் அதில் பவுடராக அரைச்சி வச்ச கலவையை சேர்த்து நல்லா வதக்கி விடவும். கடைசியில் வதக்கிய மசாலாவானது மாங்காயில் நன்கு சேர்ந்ததும், இறக்கி வைக்கணும்.

இறுதியில் மற்றோரு வாணலியை அடுப்புல வச்சி, கூடுதலாக நல்லெண்ணெய் ஊற்றி நன்கு காய்ச்சியதும், அதை வதக்கிய மாங்காயில் சேர்த்து நல்லா கிளறிவிட்டு பிறகு, அதை ஆறவச்சி சுத்தமான  கண்ணாடி பாட்டிலில் மாற்றிக்கலாம். இதை சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

Categories

Tech |