Categories
தேசிய செய்திகள்

வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்யமுடியாது… வெளியான அதிரடி உத்தரவு…!!!

கொரோனா காலத்தில் தவணை செலுத்தாதவர்களின் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்யமுடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி சுமையால் பலரும் பாதிக்கப்பட்டனர். அப்போது வங்கி கடன்களுக்கான தவணையை செலுத்துவதில் மத்திய அரசு சலுகை அளித்து இருந்தது. ஆகஸ்ட் மாதம் வரை இஎம்ஐ செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டது. தவளை செலுத்தாத காலத்தில் சில வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்தன. அதனால் கடன்களுக்கான தவணையை நீட்டிக்கக் கோரிமற்றும் கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கொரோனா காலகட்டத்தில் கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் கடன் தவணை தொகையை 6 மாதத்திற்கு மேல் நீட்டிக்க முடியாது.இந்த காலகட்டத்தில் கடன்களுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது.

மேலும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கொள்கையில் தலையிட முடியாது. கொரோனா காலத்தில் 2 கோடி வரையிலான கடனுக்கு வட்டி வசூலித்து இருந்தால் திருப்பித் தரப்பட வேண்டும். வங்கி கடன் தவணை முறை திருப்பி செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கிறோம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |