Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி ஏற்றுமதி விவகாரம்”… ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு ஆதரவளிக்கும் ஏஞ்சலா மெர்க்கல்…!!

அஸ்ட்ராஜெனேகா நிறுவன தடுப்பூசியின் ஏற்றுமதி தொடர்பான விவகாரத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு ஜெர்மன் சான்செலர் ஏஞ்சலா மெர்க்கல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கொரோனா என்னும் கொடிய வைரஸிற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில்  மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குறைந்த அளவு  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ள அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் பிரிட்டனுடன் மட்டும் தனது ஒப்பந்தத்தை முழுமையாக வழங்கியிருப்பது ஐரோப்பிய அதிகாரிகள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Von Der Leyen,  ” கண்டத்தில் தயாரிக்கப்பட்ட  அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிப்போம்”  என்று அச்சுறுதினார். இந்நிலையில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருக்கு நானும் எனது ஆதரவை தெரிவிக்கின்றேன் என்று ஜெர்மன் சான்செலர் ஏஞ்சலா மெர்கல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “அந்த நிறுவனத்துடன் நமக்கு பிரச்சினை இருக்கின்றது. அதனால் இந்த விவகாரத்தில் பொறுப்புடன் சிந்தித்து தான் முடிவெடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |