நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து சற்று மீண்டு வந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை ராமாபுரத்தில் 43 வயதான நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவருடைய வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது என்பதால் மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்த அவர் ஆம்புலன்ஸ்க்கு அழைத்துள்ளார். ஆனால் ஆம்புலன்ஸ் சேவை இல்லை என்று கூறிய காரணத்தால் பேருந்தில் பயணித்து சிகிச்சை மையத்திற்கு சென்றுள்ளார். இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.