திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் சாமி கோவிலில் கடந்த 20-ஆம் தேதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள சேர்வீடு கிராமத்தில் சிறப்பு வாய்ந்த வேட்டைக்காரன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 20-ஆம் தேதி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கோவில் விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம, அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. வேட்டைக்காரன் சாமி மற்றும் குதிரைகள் மேள தாளங்களுடன் வர்ண குடை அலங்காரத்துடன் மதலை சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து கண் திறக்கும் நிகழ்ச்சி நத்தம் புறநகர் பகுதியில் நடைபெற்றது. அதன்பின் வேட்டைக்காரன் சாமி நகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் நத்தத்திலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களிலும் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசித்து சென்றனர். இந்த விழாவிற்கான முன்னேற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் சேர்வீடு கிராமத்தினர் சேர்ந்து செய்தனர்.