உத்திரப்பிரதேசத்தில் போலி மருத்துவர் பிரசவம் பார்த்ததில் தாயும் குழந்தையும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம், சுல்தான் மாவட்டம் கிராமத்தை சேர்ந்த ராஜாராம் என்பவர் தனது மனைவிக்கு பிரசவத்திற்காக அருகில் உள்ள சாஸ்தா என்ற மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த மருத்துவமனையின் உரிமையாளர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று ராஜேந்திர சுக்லா என்பவரை நியமித்தார்.
கடந்த புதன்கிழமை அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்தார். இதில் குழந்தை பிறந்த உடனே இறந்தது. தாயும் அதிக ரத்தப்போக்கு காரணமாக இறந்தார். இதையடுத்து கணவர் ராஜாராம் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது விசாரணை நடத்தியதில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருப்பது தெரியவந்தது. மேலும் ரேஸர் பிளேட் மூலம் தவறான அறுவை சிகிச்சை செய்து அதன் காரணமாக தாயும் குழந்தையும் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.