Categories
அரசியல் மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்ட தொகுதியாகும். இதுவரை நடைபெற்ற இரு தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளனர். திமுக எம்.எல்.ஏவாக இருந்த ராதாமணி உரியிழந்ததால் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றது. தற்போதைய எம்.எல்.ஏ அதிமுகவின் முத்தமிழ் செல்வன். விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 2,33,901 வாக்காளர்கள் உள்ளனர்.

விக்கிரவாண்டி இடை தேர்தலின் போது அரசு கலை கல்லூரி உருவாக்கபடும், நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாக நிறைவேற்றபடும் என பல வாக்குறுதிகளை அதிமுக வழங்கியது. இடைத்தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றபடாததால் தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். நந்தன் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

நியாயவிலை கடைக்கான அரிசியை தங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர். அன்னியூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும், போக்குவரத்து வசதிகள் செய்து வர வேண்டும் என்பன மக்களின் கோரிக்கைகளாகும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டையை உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Categories

Tech |