உத்தரகாண்ட் மாநிலத்தில் வயதானவர்களுக்கு தன்னார்வ குழு ஒன்று கல்வி போதித்து வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சிரோர் கிராமத்தை சேர்ந்த 60 வயது கடந்த பெண்கள் அனைவரும் தங்களது அன்றாட பணியை முடித்த பின்னர் திறந்தவெளி பாடசாலைக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை உணர்த்தும் வகையில் இது அமைந்துள்ளது. மேலும் அவர்களுக்கு தன்னார்வ குழுவினை சேர்ந்தவர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர்.