உத்திரப்பிரதேச மாநிலத்தில் நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த போலி மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகி இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ,சுல்தான்பூர் நகரை சேர்ந்தவர் பூனம் (வயது 35). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென்று ,சென்ற வார வியாழக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது . இதனால் அவரது உறவினர்கள் அருகிலுள்ள ,ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவருக்கு அங்கு பணி புரியும் மருத்துவர் ராஜேந்திர குமார் சுக்லா, பிரசவத்திற்காக அந்தப் பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்தார். அவர் அறுவை சிகிச்சை செய்யும்போது ,அந்தப் பெண் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். அதோடு அப்பெண்ணின் வயிற்றிலிருந்த பச்சிளம் குழந்தையும் உயிரிழந்தது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த அப்பெண்ணின் உறவினர்கள், பிரசவம் பார்த்த மருத்துவரையும் ,அந்த தனியார் மருத்துவமனையும் முற்றுகையிட்டு ,இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தனர் . இந்தப் புகாரின் பேரில் மருத்துவமனையில் விசாரணை நடத்திய போலீசார், மருத்துவராக பணிபுரிந்து வந்த ராஜேந்திரகுமார் சுக்லா என்பவர் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் என்றும், அவர் போலி மருத்துவர் என்றும் விசாரணையில் தெரிந்தது . இதேபோல் 12 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மருத்துவமனை நிர்வாகியான ராஜேஷ்குமார் சாக்னி என்று தெரிந்தது . இதன் காரணமாக போலீசார் அவர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் .