கொலை செய்தால் ஏற்படும் மன நிலையை அனுபவிப்பதற்காக நண்பனின் தந்தையை இளைஞர் கொலை செய்துள்ளார்.
உக்ரைனில் உள்ள Hnidyn என்ற கிராமத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் அவரது நண்பரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த நண்பனின் தந்தையை பலமாகத் தாக்கியுள்ளான் . இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி விரைந்து வந்து பார்த்தபோது அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அது என்னவென்றால், நண்பனின் தந்தையின் உடல்மீது இந்த 19 வயது இளைஞர் அமர்ந்திருந்து அவரது மார்பில் கத்தியால் பலமாக குத்தியுள்ளான். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தான் கொலை செய்வதை நண்பனின் தாய் பார்த்து விட்டதால் அந்த இளைஞர் உடனடியாக வீட்டிலிருந்து தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ளான் .
நண்பனின் தாய் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த 19 வயது இளைஞரை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அந்த இளைஞன் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளான். விசாரணையில் ஒரு பவுண்ட் பணத்திற்காக இந்த கொலையை செய்தேன் என்றும் கொலை செய்தால் ஏற்படும் மன நிலையை அனுபவிப்பதற்காகவே இந்த கொலை செய்தேன் என்றும் கூறியுள்ளான்.
மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் உயிரிழந்த நபரின் மகன்தான் அவரை கொல்வதற்காக இந்த இளைஞனை அனுப்பியது தெரிய வந்துள்ளது. இதனால் அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டேன் என்று கூறியுள்ளான்.