தற்கொலை செய்வது எப்படி என்று வீடியோவை பார்த்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பீடர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவன் அம்பாட்டி. இவர் பெங்களூருவில் அமேசான் நிறுவனத்தின் குழுத் தலைவராக பணியாற்றி வருகிறார். நீண்ட நாளாகவே தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்று மனவருத்தத்தில் இருந்துள்ளார். பிறகு தனக்கு யாரும் இல்லை என்று தனிமையில் இருந்து வந்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் யாரும் மின்விளக்குகளை உபயோகிக்க வேண்டாம். வீடு முழுவதும் பரவியுள்ளது என்று எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளார். ஜீவனுடன் தங்கியிருந்தவர்கள் மூன்று நாட்கள் கழித்து ஊரிலிருந்து ரூமிற்கு வந்த பொழுது அவர் இறந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் அனுப்பினார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை செய்த போது அவர் செல்போனில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று யூடியூபில் பார்த்தது தெரியவந்துள்ளது.