அகமதாபாத்தில் ஆண்களை மயக்கி திருமணம் செய்து கொண்டு விலை உயர்ந்த பொருட்களை திருடிக்கொண்டு சுற்றிய கும்பலை குஜராத் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
குஜராத் மாநிலம், ஜுனகத் பகுதியில் ஆண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்து விட்டு அவர்களிடம் உள்ள தங்கம் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் பெண் உட்பட 5 பேர் கொண்ட குழுக்களை குஜராத் போலீஸ் கைது செய்தனர். ஜுனகத் கிராமத்தில் வசிக்கும் இளைஞருக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் முடிந்த அடுத்த நாளே அப்பெண் இளைஞரிடம் இருந்து 3 லட்சம் ரொக்கம், தங்க நகைகளை திருடிக் கொண்டு ஓடிவிட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தீவிரமாக விசாரணை செய்த போது இது போன்ற திருட்டு சம்பவம் அடிக்கடி வந்து இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கும்பலிடம் திருமண வரன் பார்ப்பது போல காவல்துறையினர் சந்திக்க முயன்றனர். எதிர்பார்த்தபடியே அவர்களும் அதில் சிக்கினர். அதில் அஞ்சலி என்ற பெண்ணும், அவரது தாயார் என 5 பேர் சிக்கி கொண்டனர்.
அனைவரும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை அந்த பெண் 18 நபரை இதுபோன்ற ஏமாற்றி உள்ளது தெரியவந்தது.