ராணிப்பேட்டையில் ஆட்டை திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழிலை செய்து வருவதோடு மட்டுமல்லாமல் ஆடு வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். இதனால் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை ஒன்றை அமைத்து அதில் 15 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். மேலும் ஆடுகளை பகலில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று விட்டு இரவில் கொட்டகைக்குள் பத்தி விடுவது வழக்கம். இந்நிலையில் கொட்டகையிலிருந்து மர்மநபர்கள் ஆடு ஒன்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மணி வாலாஜா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வந்தார்கள். அப்போது ஆடுகளை திருடி சென்றது திருமணச்சேரியை சேர்ந்த விவேக் என்பதும் அவர் தனது நண்பர்களுடன் இச்செயலை புரிந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் காவல் துறையினர் மூவரையும் கைது செய்து ஆட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.