Categories
தேசிய செய்திகள்

காதலனை கழட்டி விட்டு…” வேறு ஒரு நபரை திருமணம் செய்ய தயாரான பெண்”… ஆத்திரத்தில் காதலன் செய்த காரியம்..!!

தன் காதலை மறுத்து விட்டு வேறொரு நபரை திருமணம் செய்ய முற்பட்டதால் அந்தப் பெண்ணை காதலன் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச நக்ல லல்மன் பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 21 வயதுடைய கல்பனா என்பவர் காணாமல் போனது தெரியவந்தது.

மேலும் இது குறித்து விசாரித்தபோது அந்தப் பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த அஜப் சிங் சிங் என்பவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். திடீரென்று அவர்களது வீட்டில் வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்ததால் அந்தப் பெண் அஜப் சிங்துடன் உறவை முடித்துக் கொண்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அவர் பலமுறை அந்த பெண்ணிற்கு போன் செய்தும் அந்த பெண் அழைப்பை ஏற்க மறுத்துள்ளார்.

தொடர்ந்து அந்த பெண்ணை அருகில் உள்ள வயல் வெளிக்கு அழைத்துச் சென்று வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அப்பெண்ணை சுட்டியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் சடலத்தை கொண்டு அவரது வீட்டின் அருகே 300 மீட்டர் உள்ள வயலில் வீசிவிட்டு அவர் அங்கிருந்து தப்பி உள்ளார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளைஞனை கைது செய்தனர்.

Categories

Tech |