Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

”ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய்”….மிஸ் பண்ணாம வாங்கி சாப்பிடுங்க ….!!

ஏழைகளின் ஆப்பிள்  என்று செல்லமாக அழைக்கப்படும் பேரிக்காயின் மருத்துவக் குணங்களை பற்றி   அறியலாம் வாங்க .

பேரிக்காயில்  நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடென்ட், உயர்தர ப்ளேவனாய்டுகள், பீட்டா கரோட்டீன் , தாமிரம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மேங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பி காம்பளக்ஸ் வைட்டமின், போலேட், ரிபோஃப்ளோவின், வைட்டமின் பி 6  ஆகியவை நிறைந்துள்ளன.

Pear க்கான பட முடிவு

இதயம் பலவீனமாக உள்ளவர்களும், அதிக படபடப்பு உள்ளவர்களும் தினமும் பேரிக்காய்  சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு  பேரிக்காய் மிகவும் நல்லது. கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும், அதன்  எலும்பு வலிமை பெறவும்  பேரிக்காய் சிறந்த மருந்து.

Pear red க்கான பட முடிவு

 

பேரிக்காயை காலையிலும் மாலையிலும்  தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.  குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் பேரிக்காயில் நிறைந்துள்ளன. பேரிக்காய் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் உடல் வலுவுக்கும் உதவுகிறது.

Pear yellow க்கான பட முடிவு

 

பேரிக்காய் உடல் எடையைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.பேரிக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.பேரிக்காய் பழங்கள் உடல் உஷ்ணத்தை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது .

Categories

Tech |