Categories
Uncategorized

“யானையுடன் புகைப்படம்” குழந்தையுடன் சென்ற தந்தை…. திடீரென நடந்த பயங்கரம்…. நொடியில் தப்பிய இருவர்….!!

யானை இருக்கும் பகுதியில் தன் குழந்தையுடன் புகைப்படம் எடுக்கச் சென்ற நபரை யானை தாக்க முயற்சித்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் ஜோஸ்மேனுவல்(25) என்பவர் san Diego என்ற உயிரியல் பூங்காவுக்கு தன் இரண்டு வயது பெண் குழந்தையுடன் சுற்றி பார்க்க சென்றுள்ளார்.அப்போது புகைப்படம் எடுபதற்காக குழந்தையுடன் யானைகள் இருக்கும் பகுதிக்குள் வேலி தாண்டி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஆண் யானை ஒன்று அவரைத் தாக்குவதற்காக ஓடிவந்தது. அவரின் முதுகுக்குப் பின்னால் யானை வந்ததால் ஜோஸ்மேனுவல் அதனை கவனிக்கவில்லை.

 

அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறலைக் கேட்ட ஜோஸ் யானை வருவதை அறிந்து வேலி தாண்ட முயற்சித்தார். அப்போது அவர் கையில் இருந்த குழந்தை விழுந்து விட்டது. ஜோஸ் தனது குழந்தையை தூக்க சென்ற போது மீண்டும் யானை தாக்க முயற்சித்தது. ஆனால் அவர் அதிஷ்டவசமாக தன் குழந்தையை தூக்கி விட்டு வெளியே வந்து விட்டார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

https://twitter.com/i/status/1373428509104689156

குழந்தையின் உயிரை வைத்து வேடிக்கை காட்டிய அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவருக்கு 100,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விசாரணை மார்ச் 30 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |