நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் சாணிக் காயிதம், அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் ரங் தே, குட் லக் சகி, சர்க்காரு வாரி பட்டா ஆகிய தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய பட புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. கொழுக் மொழுக் என இருந்த கீர்த்தி மெலிந்த தோற்றத்தில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர் .