Categories
லைப் ஸ்டைல்

எச்சரிக்கை…!! இந்த நேரத்தில் தண்ணீர் குடிக்காதீங்க…. பல பிரச்சனைகள் இருக்கு…!!

நேரம் பார்க்காமல் நாம் குடிக்கும் தண்ணீர் நமது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

நாம் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு அதிக நன்மைகள் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் அந்த நீரை நாம் சரியான நேரங்களில் குடிக்காவிட்டால் அது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் அறிவியல் ரீதியான உண்மையாகும். நம்மில் பலருக்கு உணவு உண்ட பிறகு நீர் அருந்தும் பழக்கம் இருக்கும் ஆனால் அவ்வாறு குடிக்கக் கூடாது. ஏனெனில் இரைப்பையில் உணவு செரிமானத்திற்கான அமிலம் சுரக்கும் அப்போது நாம் நீர் அருந்துவதால் அமிலத்துடன் கலந்து செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதேபோல் இரவு உணவுக்குப்பின் தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இரவில் சிறுநீரக செயல்பாடுகள் மெதுவாக நடக்கும். அப்போது நீர் அருந்தினால் தூக்கமின்மையும், காலையில் எழுந்தவுடன் முகம் சிறிது வீக்கத்துடனும் காணப்படும். மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவோர் உடற்பயிற்சியை மேற்கொண்டு விட்டு நீர் அருந்துவதால் உடலின் தட்ப வெப்பம் உயர்ந்து மயக்கத்தை ஏற்படுத்தும். குளிர்பானங்கள், ஐஸ்கிரீம்கள் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. அவ்வாறு குடிப்பதால் வயிற்றில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் காரணமான உணவுகளை உண்ட பிறகும் நீர் அருந்த கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |