ஸ்காட்லாந்து 12 வயது சிறுமிகள் இரவு முழுவதும் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தை சேர்ந்த சிறுமி எமி கிரீனான் (12 வயது). இவரும் அவரது தோழியும் பள்ளி முடிந்ததும் கிளாஸ்கோ என்ற இடத்திற்கு செல்வதற்காக ரயிலில் ஏறியுள்ளனர். இந்த ரயில் பயணத்தின் போது அந்த இரண்டு சிறுமிகளும் அயர்ந்து தூக்கியுள்ளனர். இதனால் அவர்கள் இருவரும் கிளாஸ்கோ பகுதியில் இறங்காமல் ரயில் கடைசியாக நிற்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். அதன் பின்னர் வெகுநேரம் கழித்து கண் விழித்து பார்த்த அந்த சிறுமிகள் ரயிலில் கதவு ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டு இருட்டாக இருப்பதை கண்டு தாங்கள் சிக்கியுள்ளதை உணர்ந்துள்ளனர்.
இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் பயத்தில் இருந்த அந்த சிறுமிகள் இரவு முழுவதையும் அந்த ரயிலில் கழித்துள்ளனர். பின்னர் காலையில் ரயில் எடுப்பதற்காக வந்த ரயில்வே ஊழியர்கள் ரயிலினுள் அடைபட்டு கிடந்த சிறுமிகளை மீட்டு அவர்களுக்கு சாப்பிட உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இத்தகவலை கேட்டு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுமிகளின் பெற்றோருக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் அந்த இரண்டு சிறுமிகளையும் மீட்டு அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.