Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் கலாச்சாரத் துறை மந்திரிக்கு கொரோனா… முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து…!!!

பிரான்ஸ் நாட்டில் கலாச்சாரத்துறை மந்திரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் தன்னைத்தான் தனிமைப்படுத்திக் கொண்டுஉள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல்  உலக  நாடுகள் முழுவதிலும்  பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதற்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தற்போதுஅதற்க்கு எதிரான  தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகின்றது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் ரோஸ்லின் பேச்லோட் என்பவர் கலாசாரத் துறை மந்திரியாக பணியாற்றி வருகிறார்.  அவருக்கு திடீரென்று சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளது.அதனால் அவர் சுவாசப் பிரச்சினை காரணமாக உடனடியாக மருத்துவமனைக்கு சென்று  கொரோனா பரிசோதனையை செய்து கொண்டார் . அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து  அவர் வீட்டிலே தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் ஒரு வாரத்திற்கான தனது நிகழ்ச்சிகளை நான் மாற்றி அமைத்துள்ளேன் என்றும் இதை தவறாமல் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |