Categories
உலக செய்திகள்

இரண்டு வீடுகளில் நடந்த கத்திகுத்து…. குற்றவாளி யார்…? விசாரணையின் போது வெளியான தகவல்…!!

வட அயர்லாந்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற கத்திகுத்து குறித்த தகவலை காவல்துறையினர்  வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வட அயர்லாந்தில் நியூடௌணப்பேய் என்ற பகுதியில் உள்ள இரண்டு வீடுகளில் கத்திகுத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்  உயிரிழந்த நிலையில் ஒரு பெண்ணையும் , உயிர் போராடிக் கொண்டிருந்த நிலையில் ஒரு பெண் மற்றும் ஆணையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கத்திகுத்து சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விசாரணையின் போது கிடைத்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி நியூடௌணப்பேய் பகுதியை சேர்ந்த கென் பிளனகன் என்பவர் போதை பழக்கத்திற்கு அடிமையானதால் சம்பவத்தன்று அளவுக்கு மீறி போதை மருந்து எடுத்துள்ளார். இதனால் சுயநினைவை இழந்த கென் பிளனகன்  முதலில் தனது தாய் கரேன் மசிலீனை கத்தியால் குத்தியுள்ளார். அதன் பின்னர் அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்ற கென் பிளனகன் தனது காதலியான ஸ்டேசி நீல்லை கத்தியால் குத்திவிட்டு, அவரும் தன்னை தானே குத்தி  தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |