வெளிநாட்டிலிருந்து தங்கம் கடத்தி வந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வருவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஃபிளை துபாய் எப் இசட் 8515 துபாயிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தனர். அதில் இருவரின் தலைமுடி சந்தேகம் ஏற்படும் வகையில் இருந்ததால் அவர்களை தடுத்து நிறுத்தி பிறகு அவர்களை சோதனை செய்து பார்த்ததில் அவர்கள் அணிந்திருந்த விக்குகளிகளில் 698 கிராம் எடை கொண்ட தங்கம் கண்டறியப்பட்டது.
அந்த இருவரில் ஒருவர் ராமநாதபுரத்தை சேர்ந்த 39 வயதான அக்பர் அலி மற்றும் இன்னொருவர் சென்னையை சேர்ந்த 26 வயதான ஹஸன் ரஃபயுதீன் என்பது தெரியவந்தது. மேலும் திருச்சியை சேர்ந்த 42 வயதான பாலு கணேசன் என்பவரும் தனது உடலில் தங்க பசை அடங்கிய 3 பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தார்.சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்ததில் அவரிடமிருந்து 622 கிராம் தங்கம் அதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.தற்போது மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.