Categories
அரசியல் காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பட்டுக்கு பெயர் போன காஞ்சிபுரம் கோவில்களில் நகரமாகவும் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த ஊர் என்று சிறப்பையும் இந்த ஊர் பெற்றுள்ளது. காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் கே.எம்.பி.பி., காங்கிரஸ் மற்றும் பாமாக ஆகிய கட்சிகள் தலா ஒரு முறை வென்றுள்ளன. திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றுள்ளன.தொகுதியின் தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் எழிலரசன். காஞ்சிபுரம் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3,08,406 ஆகும்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மக்கள் கூறுகின்றனர். சாலைகளை சீர் அமைப்பது, மழை நீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என்றும், பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

மருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளை உருவாக்க வேண்டுமென கோரும் மக்கள் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் பிரதான கோரிக்கையாகும். இப்பகுதியில் உள்ள ஏரிகளை தூர்வாரி முறையாக பராமரிக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Categories

Tech |