Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் கொரானா… அலட்சியமா இருக்காதீங்க… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 21 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2,271 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,299 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்று தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக வேகமெடுத்து பரவி வருவதால் ஊரடங்கு அமல் படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்றை சிறிதும் பொருட்படுத்தாமல் பெரும்பாலான மக்கள் பொதுஇடங்களில் முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களில் பொது மக்கள் முககவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். எனவே அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |