Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டதுக்கு இப்படி சொல்லுறாங்க…. புகார் அளித்தும் பயனில்லை…. பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்….!!

தனியார் பேருந்து நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள காச்சினாம்பட்டி பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூலி வேலைகளுக்குச் சென்றும் ஜவுளி கடைகளில் வேலை பார்த்து தங்களது அன்றாட வாழ்வை கழிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் சின்னதாராபுரம் பகுதிக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கரூரிலிருந்து தாராபுரம் வரை செல்லும் தனியார் பேருந்து  காச்சினாம்பட்டி பிரிவில் கடந்த சில மாதங்களாக நிறுத்தாமல் சென்றுள்ளது. இதனை அடுத்து பேருந்தில் மக்கள் ஏறிய பிறகு காச்சினாம்பட்டிக்கு நடத்துனரிடம் டிக்கெட் கேட்டால் அவர் அங்கு பேருந்து நிற்காது என கூறுவதால் பயணிகள் இறங்கி விடுகின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோபம் அடைந்த மக்கள் தாராபுரத்தில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்தை சிறைபிடித்து விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த சின்னதாராபுரம் காவல்துறையினர் காச்சினாம்பட்டி பிரிவில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |