உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் 1 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வென்றுள்ளது. அதிமுக மற்றும் திமுக தலா 6 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளன. தற்போதய எம்.எல்.ஏ திமுகவின் சுந்தர். உத்திரமேரூர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,59,633 ஆகும். தமிழகத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான உத்திரமேரூர் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
முறையாக தூர்வாரப்படாததால் ஒரு போகத்திற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் உள்ள கல் குவாரிகள் சுற்றுச்சூழல் சீர்கெடுவதாகவும், கட்டடங்களில் விரிசல் ஏற்படுவதாகும் புகார் கூறுகின்றனர் மக்கள். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் நியமித்து தரம் உயர்த்த வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. அடிப்படை வசதிகள் கூட இல்லாததால் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.