Categories
விளையாட்டு கிரிக்கெட்

டி-20 ஓவர் உலக கோப்பையை வெற்றி பெற… தொடக்க வீரராக விளையாடும் விராட் கோலி…!!

டி 20 ஓவர் உலகக் கோப்பைக்கு பயிற்சி மேற்கொண்டு, ஐ.பி.எல் போட்டியிலும் தொடக்க வீரராக விளையாட போகிறேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய கடைசி 20வது  ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் பெற்றது. கேப்டனாக விராட் கோலி 52 பந்தில் 80 ரன்னும், ரோகித் சர்மா 34 பந்தில் 64 ரன்னும், ஹர்த்திக் பாண்ட்யா 17 பந்தில் 39 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 17 பந்தில் 32 ரன்னும் எடுத்துள்ளனர்.

அதற்குப்பின் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இறப்புக்கு 158 ரன்களே  எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 34 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதற்கு முன்பு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நேற்று நடந்த ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா உடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்கியுள்ளார்.

அந்த தொடரில் தொடக்க ஜோடி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக ஆடாததால்  கேப்டனே  தொடக்க வீரராக ஆடியுள்ளார். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இணைந்து தொடக்க விக்கெட்டுக்கு 50 ஓவரில் 94 ரன்கள் எடுத்து உள்ளனர். இதுகுறித்து 20 ஓவர் உலக கோப்பை தயார் படுத்திக் கொள்வதற்காக ஐ.பி.எல் போட்டிகளும் நான் தொடக்க வீரராக விளையாட போகிறேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டியிலும், உலக கோப்பையிலும் தொடக்க வீரராக விளையாடுவேன் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். உலகக்கோப்பையை வெல்ல இன்னும் காலநேரம்  இருக்கின்றது ஆனால் அதற்குள் பேட்டிங் வரிசை எப்படி இருக்குமென்று இப்போது கூற முடியாது அந்த ஆட்டத்தில் தொடக்க வீரராக ஆடியது ஒரு சிறந்த முடிவு என்று கூறினார். இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நடக்க உள்ளது. அந்த முதல் ஆட்டம் வருகின்ற 23ஆம் தேதி புனேவில் அரங்கேற்றப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |