ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர், பிரிட்டனிற்கு அளிக்கப்படும் தடுப்பூசிகளை தடுக்க வேண்டும் என்று கூறியதற்கு பிரிட்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் பாதுகாப்புத்துறை செயலரான பென் வாலஸ், தடுப்பூசி தொடர்பில் எங்களுக்கு எதிராக எந்த செயல்பாட்டையும் மேற்கொள்ள வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுள்ளார். அதாவது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது.
இந்நிலையில் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகளில் கொரோனாவின் 3ஆம் அலை பரவி வருகிறது. இதனால் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவரான Ursula von der leyen என்பவர் தடுப்பூசிகளை பிரிட்டனுக்கு வழங்குவதை தடுக்கவேண்டும் என்று எச்சரித்திருக்கிறார்.
இந்நிலையில் பாதுகாப்புத்துறை செயலரான வாலஸ், “நடக்கும் அனைத்தையும் உலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது, இது ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திற்கும் நிச்சயமாக தெரிந்திருக்கும்” என்று கூறியுள்ளார். மேலும் தடுப்பூசிகளை பிரிட்டனிற்கு வழங்குவதை தடுத்து நிறுத்தினால் அது சட்டவிரோதமானது. அது மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் நல்ல பெயரை கெடுக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.