மதுரையில் வீற்றிருக்கும் மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.
தமிழக மதுரை மாவட்டத்தில் மிக அழகாகவும்,பிரம்மாண்டமாகவும் தோரணையுடனும் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவிலை தெரியாத ஆட்களே கிடையாது . இன்றளவும் சில நபர்கள் பெண்ணின் அழகை வர்ணிக்க வேண்டுமென்றால் மதுரை மீனாட்சி அம்மன் போல் அழகாய் இருக்கிறாள் என்று அம்மனை ஒப்பிட்டு வர்ணிப்பார்கள் . இந்த அளவிற்க்கு அக்கோவிலின் அம்மன் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருக்கிறது.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோடை வசந்த விழா நடைபெற்று வருகிறது இவ்விழாவின் இரண்டாம் நாள், மீனாட்சி அம்மன் சித்திரை வீதியிலிருக்கும் வெள்ளியம்பல மண்டபத்தில் சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் மிகவும் பிரம்மாண்டமான, அழகான அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.