விவசாயத்தில் மண்வெட்டி பிடித்த கை என்று பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சியினர் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பரப்புரை செய்து வருகின்றனர்.
முதல்வர் பழனிசாமி தனது பரப்புரையின் போது என்னுடைய கை மண்வெட்டி பிடித்து என்று தெரிவித்தார். டிராக்டர் ஒட்டவும் தெரியும். பருவத்தில் எதை விதைக்க வேண்டும் என தெரியும். நாம் விவசாய குடும்பத்தினர் என்பதை இந்த தேர்தலில் காட்ட வேண்டுமென முதல்வர் பரப்புரை செய்தார்.