பிரபல நடிகையான ஐஸ்வர்யா மேனனின் ஒர்க் அவுட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஐஸ்வரியா மேனன். ஹிப் ஹாப் தமிழா ஆதியின் “நான் சிரித்தால்” படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் வீரா,தமிழ் படம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது தனது புகைப்படத்தையும் ஒர்க் அவுட் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார். அதேபோல் அவர் தற்போது வெளியிட்டுள்ள ஒர்க் அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.