பெங்களூரை சேர்ந்த மாணவி ஒருவர் அதிகநேரம் செல்போனை பயன்படுத்தி வந்ததால் பெற்றோர்கள் கண்டித்ததால் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மாநிலம் தொட்டபள்ளாப்புரா பகுதியை சேர்ந்த சினேகா என்பவர் அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் காலை கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு வந்து தனது தோழிகளுடன் அதிக நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்துள்ளார். பின்னர் அவருடைய பெற்றோர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை கண்டித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த சினேகா கடந்த 3ஆம் தேதி வீட்டில் வைத்து அந்த எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து உயிருக்கு போராடிய மகளை பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சினேகா இறந்துவிட்டார். இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் சினேகாவின் உடலை பார்வையிட்டனர். பிறகு உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.