திண்டுக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் அதிசய பலாமரம் ஒன்று உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியில் அருண்நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாலைப்புதூரில் விவசாயத் தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு அதிசய பலாமரம் ஒன்று இருக்கிறது. அந்த பலாமரம் 10 அடி உயரம் கொண்டது. பலாமரம் நடவு செய்யப்பட்ட இரண்டு வருடங்களில் நல்ல பலன் கொடுத்துள்ளது. தற்போது இந்த மரத்தில் காய்கள் காய்த்து தொங்குகிறது. இது பாலூர்-1 வகையை சேர்ந்தது ஆகும்.
இந்த மரத்தில் விளையும் பழங்கள் சுவை வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மலைப்பகுதிகளில் உள்ள பலாமரங்களில் 30 முதல் 50 அடி உயரம் உள்ள மரங்களில் தான் காய்களை பார்க்க முடியும். ஆனால் இந்த மரமோ 10 அடி உயரம் தான் உள்ளது. ஆனால் இதில் 10 முதல் 20 காய்கள் தரையில் இருந்து எளிதாக பறிக்கும் வண்ணம் காய்க்கிறது. சாலைப்புதூர் வழியாக வெளி மாநிலங்கள் செல்லும் பயணிகள், கொடைக்கானல், கேரளா மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த அதிசய பலா மரத்தை செல்போனில் படம் எடுத்துச் செல்கின்றனர்.