Categories
மாநில செய்திகள்

எய்ம்ஸ் ம‌ருத்துவ‌ம‌னையை மோடி அறிவித்தார்… ஆனால் செங்க‌ல் கூட‌ இப்போது இல்லை… முக.ஸ்டாலின்..!!

எய்ம்ஸ் மருத்துவமனையை மோடி அறிவித்தார் ஆனால் ஒரு செங்கல் கூட இப்போது இல்லை என்று மு க ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்சி உறுப்பினர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் மதுரை திருமங்கலத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது நான் தேர்தலுக்காக மட்டும் இங்கு வரவில்லை. எல்லா சூழலிலும் நான் மக்களுடன் இருப்பேன் என்று கூறினார்.  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட மோடி அறிவித்தார். ஆனால் ஒரு செங்கல் கூட இப்போது இல்லை. குஜராத்தில் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு தற்போது கட்டுமானம் நடந்துவருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |