நெல்லையில் காவல்துறையினர்கள் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதற்காக அணிவகுப்பு நடத்தினர்.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தல் எந்தவிதமான பிரச்சனையுமின்றி அமைதியான முறையில் நடைபெற துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வருகைத்தந்துள்ளனர். மேலும் காவல்துறையினர்களும் துணை ராணுவத்தினரும் இணைந்து மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் ஆங்காங்கே அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் காவல்துறையினர்கள் சார்பாக நடைபெற்ற அணிவகுப்பு நெல்லையப்பர் கோவிலில் தொடங்கி பாறையடி கிராமத்தில் முடிவடைந்தது.
இந்த அணிவகுப்பை நெல்லை துணை கமிஷனர் சீனிவாசன் தலைமை தாங்கிய நிலையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர்கள் பாதுகாப்பு உடை அணிந்து கையில் கண்ணீர்புகை குண்டு மற்றும் பயங்கரமான ஆயுதங்களை ஏந்தியவாறு அணிவகுப்பில் கலந்து கொண்டனர். மேலும் இதில் 150 காவல்துறையினர்கள் கலந்துகொண்ட நிலையில், அணிவகுப்பு முடியும் இடத்தில் நின்றுக்கொண்டிருந்த பொதுமக்களிடம் அச்சமின்றி வாக்களிக்க செல்லலாம் என்று கூறியுள்ளார்கள்.