புதுச்சேரி மாநிலத்தில் மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கட்டுப்படுத்த பல மாநிலங்கள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22 முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.