Categories
தேசிய செய்திகள்

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில்….” நாக்கை அறுத்துக் கொண்ட கணவன்”… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது கணவன் தனது நாக்கை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் என்பவரும் அவரது மனைவி நிஷா என்பவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முகேஷ் தனது மனைவியுடன் சண்டையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நிஷா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். சனிக்கிழமை பிற்பகுதியில் முகேஷ் நிஷாவுக்கு போன் செய்து தன்னுடன் வாழ வீட்டிற்கு வருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு நிஷா  மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்து முகேஷ் ஒரு பிளேடை எடுத்து தன்னுடைய நாக்கை வெற்றி கொண்டார். அவருடைய அழுகுரல் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் முகேஷின் நாக்கை வெட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். நான் இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவரை கான்பூர் நகரில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |