Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோபத்தில் கண்டித்த பெற்றோர்… வாலிபருடன் மீட்கப்பட்ட சிறுமி… போக்சோவில் சிறையில் அடைத்த காவல் துறையினர்…

ராசிபுரத்தில் சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரத்தில் இருக்கும் வெங்காயபாளையத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி மோகனூரிலுள்ள அக்கா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அந்த சமயத்தில்  மூர்த்திக்கும், அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இதையறிந்த சிறுமியின் பெற்றோர்கள் அவர்களை கண்டித்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி வீட்டில் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மூர்த்தியின் மீது  மோகனூரில் உள்ள  காவல்  நிலையத்தில்  புகார் அளித்துள்ளனர்.  இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு மோகனூர் காவல் துறையினர் தீவிரமாக தேடிவந்த நிலையில் அவர்களை கண்டுபிடித்து சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்து, மேலும் மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.

Categories

Tech |